Sunday 2 September 2012

நான் ஒரு பைத்தியகாரன்{?!}


நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்த பதிவும் நீங்கள் எதிர்பார்ப்பது போல சுவாரசியமாகவும், தரமாகவும் இருக்காது. தவிர்க்க முடியாமல் நிறைய எழுத்து பிலை(ழை)கள் இருக்கலாம். ஆதலால் சகித்துக் கொண்டு படிக்க விருப்பமிருக்கிறவர்கள் மேற் கொண்டு படிக்கலாம்.

     இந்த பதிவை ஒரு முக்கியமான பதிவாக நான் கறுதுகிறேன். ஏனா, இதில் நான் எப்படி இந்த சமூகத்தினால் பைத்தியகாரனாக மாற்றபட்டேன், அல்லது இந்த சமுதாயம் எப்படி என்னை பைத்தியகாரனாக பார்க்கிறது, அல்லது இந்த சமூகம் எந்த அளவுக்கு பைத்தியகாரதனமாக இருக்கிறது, என்பதை சொல்லத்தான் இந்த பதிவை இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன்.

     நான் எந்த அளவுக்கு பைத்தியகாரனாக இருக்கிறேன் என்பதை நிரூபிக்க என் சிறு வயதில் நடந்த சம்பவங்களை வைத்தே ஆரம்பிக்கிறேன். நான் சிறு வயதில் இருக்கும் போது யார் என்னிடம் வந்து உதவி கேட்டாலும் இல்லை என்று சொல்ல மாட்டேன். பொதுவா ஒரு நகர் என்று எடுத்துக்கிட்டா அதில் பல தெருக்கள் இருக்கும், அதேபோல் எங்கள் நகரில் கிட்டதட்ட ஒரு மூன்று தெருவுக்கு ஓயாமல் உதவி செய்திருக்கிறேன். சும்மா தெருவில் நடந்து போய் கொண்டிருப்பேன், ‘தம்பி இங்க வா பா, ரெட்டி கடைல போயி கால் கிலோ கடல பருப்பும், நூறு கிராம் சக்கரையும் வாங்கி வா பாஎன்று கேட்பார்கள். நானும், ‘கால் கிலோ பருப்பு, நூறு கிராம் சக்கரை என்று சொல்லிக் கொண்டேவாங்கிவறுவேன். சில நேரங்களில் எனக்கு சொல்ல தெரியாது என்று துண்டு சீட்டில் எழுதி கொடுப்பார்கள், ‘ ஃப்யேர் & லவ்லி, விஸ்பர்என்று.

     எங்கள் வீட்டை சுற்றி எங்கள் உறவினர்களே ஒரு நான்கு குடும்பம் குடி இருந்தனர். இவர்கள் இந்த உதவி என்ற பெயரில் எனக்கு செய்த கொடுமைகளை சொல்ல இந்த ஒரு பதிவு போதாது. இருந்தும் என்னால் முடிந்த அளவுக்கு சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். எந்த ஒரு சின்ன விஷயத்திர்க்கும் என்னை தேடி வந்துவிடுவார்கள், இத்தனைக்கும் என் வயதைஒத்த பிள்ளைகள் அவர்கள் வீட்டிலும் இருப்பார்கள் ஆனால் அவர்களிடம் அந்த வேலையை செய்து தர சொல்லி கேட்க மாட்டார்கள், என்னிடம் வந்து நின்னு, ‘அவனுங்க சொல் பேச்சே கேட்க மாட்டானுங்க, நீ தான் எது சொன்னாலும் கேட்ப என் செல்ல குட்டி வாடா கண்ணாஎன்று பொய்யாகவும், பச்சையாகவும் சொல்வார்கள். கொஞ்ச நாட்களில் அந்த தடியனுங்க ‘அவன் கிட்டையே சொல்லுங்க மா, அவன் தான் எது சொன்னலும் கேட்பானேஎன்று சொல்லிடானுங்க. ‘எது சொன்னாலும் கேட்பான்’, ‘எது சொன்னாலும் கேட்பான்’, ‘எது சொன்னாலும் கேட்பான்’, ‘எது சொன்னாலும் கேட்பான்’, ‘எது சொன்னாலும் கேட்பான்’, என்ற வார்தைகள் என் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. என் மேலே இவ்வளவு நம்பிக்கையா, என்று. இதனாலையே என் சக்திக்கு விஞ்சிய உதவிகளை செய்யவும் தயாராக இருந்தேன். எந்த மாதிரியான வேலைனா, கடைக்கு போயிட்டு வா, ரேஷனுக்கு போய் வா, அக்கா கூட குழந்தைய தூக்கிக்கிட்டு ஆஸ்பத்ரிக்கு போயி வா, மாமாவுக்கு கடைக்கு போயி சாப்பாடு கொடுத்துட்டு வா, குழந்தைகள ஸ்கூல்ல இருந்து கூப்பிட்டு வந்துடு போன்ற வேலைகள்தான். இது போன்ற உதவிகள் செய்யும்போது வாரத்துக்கு ஒரு முறையோ, மாசத்துக்கு இரண்டு முறையோ 2 ரூயாய், 5 ரூபாய், 10 ரூபாய் கொடுப்பார்கள். அப்போ நாங்கள் இருந்த வருமையில் என் ஆசைகளை தீர்த்துக்கொள்ள அந்த ரூபாய்கள் தேவைபட்டது. அந்த பாளாபோன காசுக்காவே என் சேவைகளை தொடர்ந்தேன். எவ்வளவு பைத்தியகாரனாக இருந்திருக்கிறேன் பாருங்கள். ஆனால், நாளடைவில் அது அவர்கள் தம்தம் காரியங்களை பூர்த்தி செய்துக்கொள்ள என் மேல் வைத்த பொய்யான நம்பிக்கையும், அன்பும் என்று புரிந்தது.


     ஒரு தெளிவு பிறந்த பிறகு, உதவி செய்வதை ஏதேதோ காரணங்கள் சொல்லி நிறாகரித்து வந்தேன். இப்போ, ‘எது சொன்னாலும் கேட்பான்என்று சொன்னவர்களே, ‘இவனுக்கு வர வர கொழுப்பு அதிகமாயிருச்சு, எது சொன்னாலும் கேட்கமாட்டேங்குறான்என்று சற்றும் வாய் கூசாமல் திட்டி தீர்பார்கள். இதன் பிறகு இந்த வசை வார்த்தைகளுக்கு அஞ்சியே மீண்டும் உதவி செய்ய ஆரம்பித்தேன். சொன்னா நம்ப மாட்டீர்கள் இது நான் கல்லூரிக்கு சென்ற பிறகும் தொடர்ந்தது. இப்போ இவன் கல்லூரிக்கு போகுறானே எப்படி இவனிடம் இந்த உதவிய கேட்கிறது என்று கொஞ்சமும் யோசிக்காமல் என் வீட்டுமுன் வந்து கையேந்தி நிற்பார்கள். எந்த அளவுக்கு என்னை கொடுமை செய்துள்ளனர் என்பதை சொல்கிறேன் கேளுங்க. கல்லூரியில் செமஸ்டர் எக்ஸாமின் போது படிக்க ஸ்டடி ஹாலிடேஸ் கொடுப்பார்கள், அந்த நேரத்தில் தீவிரமாக படிக்கலாம் என்று உட்காந்திருப்பேன் அப்போ வந்து கை ஏந்துவார்கள். ‘ஏங்க நான் எக்ஸாமுக்கு படிச்சுக்கிட்டு இருக்கேனுங்க. ‘அட பரவாயில்ல வா பா ஒரு பத்து நிமிஷம்தானே’, ‘இல்ல வர முடியாதுங்க’, ‘வேனா இதுல மீதமாகுற 5 ரூபாய நீயே எடுத்துக்கோயேன்’, ‘சரி குடுங்க’. ஐந்து ரூபாய்க்கு ஆசைபட்டு உதவி செய்வேன். அந்த 5 ரூபாய வைத்துக்கொண்டு படிக்க அமர்வேன். அந்நேரம் பார்த்து என் வீட்டினருகே தங்கி இருந்த ஒரு கல்லூரி நண்பன் வருவான், இவனை நண்பன் என்று சொல்வதை விட என் எதிரி என்று சொல்லவே விரும்புகிறேன். வந்து, ‘டேய் என்னடா படிக்க ஆரம்பிச்சிட்டியா, நாளைக்குதான் படிப்பேன்னு சொன்னியேடா பாவி’, ஏதோ நானே தவறு செய்ததுபோல முளிப்பேன். ‘சரி ஒரு 5 ரூபாய் இருந்தா குடுடா தம் அடிக்கனும்என்று கை ஏந்துவான், இத்தனைக்கும் அவன் என்னைவிட பல மடங்கு வசதிவாய்தவன். பொதுவாக இது போன்ற ஜந்துக்களுக்கு இது போன்ற செயல்கள் செய்ய ஊக்கூவிப்பதில்லை. இருந்தும் அவன் காலில் விழுந்துகூட கேட்க தயாராக இருந்ததால், அந்த ஐந்து ரூபாய அவனுக்கே பிச்சை போட்டுவிட்டேன். இனி படித்த மாதிரிதான் போங்க.

     இவர்களுக்கு பயந்தே மூன்றாம் ஆண்டிலிருந்து என்னை ஆதரிக்கும், மதிக்கும் நண்பர்களின் அறைக்கு செல்ல ஆரம்பித்தேன். இங்கிருந்து ஒரு புது பிரச்சனை ஆரம்பமானது. பொதுவாக எனக்கு நண்பர்கள் குறைவாகதான் இருப்பார்கள், நான் முழுமையாக  ஒருவனை நண்பனாக ஏற்றுக்கொள்ள பல நாட்கள் செலவளிப்பேன். அப்படி எனக்கு ஒரு நான்கு நண்பர்கள் இருந்தனர் + ஒரு எதிரி. நான் அப்பவே சொன்னேன் இல்லையா தம் அடிக்க காசு கேட்டான் என்று அவனே இந்த எதிரி. அப்படி நான் நண்பர்களின் அறைக்கு செல்வதே க்ரூப் ஸ்டடி செய்வதர்க்குதான். ஆனா இந்த எதிரி இருக்கான் இல்லையா இவர், இங்கு இருக்கும் நண்பர்களோடு சேர்ந்து படிக்க விரும்பமாட்டார், நான் மட்டும் அவன் இருக்கும் அறைக்கு சென்று தனியாக அவனுக்கு மட்டும் சொல்லிகுடுக்கனுமாம். அதையும் செய்தான் இந்த பைத்தியகாரன். காலை முழுவதும் என் எதிரியின் வீட்டில், மாலையோ நண்பர்களுடன். ஏன் இவனை எதிரி என்கிறேனா, பரிட்சை இருக்கும்போது மட்டும்தான் என் காலயே சுத்தி வருவான் மத்த நேரத்தில் எல்லாம் என்னை துச்சமாக பார்த்தான். இவனுக்கு நான் எப்படிபட்ட நேரங்களில் எல்லாம் உதவி செய்திருக்கிறேன் தெரியுமா.

     நான் கல்லூரி பயிலும்போது என் வீட்டில் வறுமை தாண்டமாடிய நேரம். இந்த உறவினர்களுக்கு உதவுவதையும் நிறுத்திக் கொண்ட்தால் அந்த ஐந்து, பத்து வருவதும் நின்றுவிட்டது. சரி இப்படியே இருந்தா வேலைக்கு ஆகாது என்று, மாலை கல்லூரி முடிந்தப் பின் ஒரு பகுதி நேர வேலை பார்க்க ஆரம்பித்தேன். என் நெருங்கிய நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும் இதை நான் கல்லூரியில் பயிலும் போது யாரிடமும் பகிர்ந்ததில்லை, ஏனா அது ஒன்னும் பெரிய விஷயமாக எனக்கு தோன்றவில்லை அதான். ஆனால் நான் சொன்ன நான்கு நண்பர்களில் ஒருத்தனுக்கும் என் எதிரிக்கும் இந்த விஷயம் தெரியும். அது என்ன வேலை என்று இங்கு சொல்ல எனக்கு விருப்பமில்லை, சற்று கடினமான வேலைதான் ஒரு மூன்று நான்கு மணி நேரம் நின்றுக்கொண்டே செய்ய வேண்டிய வேலை. எப்படியும் ஒரு நாளைக்கு 50, 60 ரூபாய் சம்பாதித்துவிடுவேன், அதை என் செலவுகளுக்கே உபயோகித்துக் கொண்டேன். அந்த வேலை முடிந்த பின் கால் செமையாக வலிக்கும், உள்ளங்கை எரியும், கண்கள் சிவந்திருக்கும் இரவெல்லாம் தூக்கமே வராது. இந்த நிலமையிலும் சில நாட்களில் அந்த வேலையை முடித்து விட்டு என் எதிரிக்கு இரவு 8, 9 மணியில் இருந்து 12 மணி வரைக்கும் பாடம் சொல்லி கொடுத்திருக்கிறேன். சில நாட்கள் காலை முதல் மாலை வரையும் கூட. எவ்வளவு பைத்தியகாரனாக இருந்திருக்கிறேன் பாருங்க.

     நான் கல்லூரில் பயிலும்போது கணிதம் சம்பந்தபட்ட பாடங்களில் கொஞ்சம் நல்லா பர்ஃபார்ம் செய்வேன். இந்த கணித பாடங்களில் உதவி செய்யதான் நண்பர்கள் அறைகளுக்கும், என் எதிரியிடமும் தாவி தாவி சென்றேன். என் எதிரியோடு சேர்த்து ஐந்து பேருக்கு இந்த கணித பாடங்களை கற்பிக்க போராடிக் கொண்டிருப்பேன். ஆனால் எனக்கு மற்றவர்க்கு பாடம் சொல்லி கொடுப்பதில் எந்த வெறுப்பும் இருந்ததில்லை, அதனாலே என் சேவை என் எதிரிக்கும் தொடர்ந்தது. கடைசியாக கல்லூரி முடிந்து பட்டமளிக்கும் விழாவின்போது நான் சொல்லி கொடுத்தவர்களில் இரண்டு நண்பர்களும், என் எதிரியும் இந்த டிகிரி வாங்க நீயும் ஒரு காரணம் என்பதை நினைவுகூர்ந்தனர். அந்த இருவரில் ஒரு நண்பன் மட்டும் ‘இந்த டிகிரியே உன்னாலதான் வாங்க முடிந்தது, நீ இல்லை என்றால் அது சாத்தியமே இல்லை என்று மிகவும் நெகிழ்ச்சியாக சொன்னான். அந்த தருணம் ஏதோ என் வாழ்வில் நான் மிக பெரிய சாதனை புரிந்ததாக உணர்ந்தேன். அவ்வளவு சாதாரனமாக யாரும் அப்படி சொல்லிவிட முடியாது. என் எதிரிகூட ஏதோ கடமைக்காகதான் சொன்னான். இதை படிக்கும் அந்த நண்பர் நினைக்கலாம், ‘டேய் பைத்தியகாரா இதெல்லாம் ஏன்டா பெருசா பேசுறஎன்று. ஆமாம் இந்த வகையிலும் நான் பைத்தியகாரன் தான். அவன் அப்படி வெளிப்படையாக எந்த ஒளிவு மறைவும் இன்றி உண்மையை ஒத்துக்கொள்ளும்போது அதனால் எனக்கு கிடைத்த அதீத மகிழ்ச்சியை நான் வெளிக்காட்டக் கூடாதா?

     சரி வீட்டிலும், அலுவலகத்திலும் என்னை பைத்தியகாரனாக பார்க்கிறார்கள். நண்பர்களிடமாவது நல்ல பெயர் எடுப்போமா என்று பார்த்தால் அவர்களும் என்னை பைத்திமாகதான் பார்கிறார்கள். நான் முன்னரே சொன்னதுபோல எனக்கு இப்பவும் நெருங்கிய நண்பர்கள் ஐந்தே பேர்தான். அதில், இருவருக்கு மட்டும் என் வாழ்வில் மிக பெரிய இடத்தை கொடுத்திருக்கிறேன். இதை படிக்கும் மற்ற மூன்று நண்பர்கள் தவராக நினைத்தாலும் பரவாயில்லை. அந்த இருவரில் ஒருவர் தோழி. இந்த இருவரையும் என் தோழன், தோழியாக இல்லாமல், என் சகோதரன், சகோதரியாகவே ஏற்றுக் கொண்டுள்ளேன். நான் வசிக்கும் இடத்தில் பல பிரச்சனைகளில் மூழ்கி கிடப்பதால் ஒரு மூன்று மாதத்திர்க்கு ஒரு முறையாவது இவர்கள் வேலை பார்க்கும் இடத்திர்க்கு போயி அவர்களுடன் இனிமையான பொழுதுகளை கழிப்பேன். அப்படி ஒவ்வொரு முறை அவர்களிடத்திர்க்கு செல்லும்போதும் இருவரும் என்னை ஏதொ ஒரு மாய உலகத்திர்க்குள் அழைத்து செல்கின்றனர். என் இதுவரைக்குமான வாழ்வில் அவர்களுடன் இருந்த தருணங்கள்தான் மிகவும் சந்தோஷமானவை. இதனால் நான் அடையும் அதீத மகிழ்ச்சியையும், அவர்கள் மீது இருக்கும் அன்பையும் வெளிப்படுத்தினால், ‘ஏன்டா ரொம்ப எமோஷன் ஆகுற பைத்தியகாராஎன்கிறார்கள். ஏன் அதை நான் எக்ஸ்ப்ரஸ் பன்னகூடாது என் பெற்றோர்களிடம், சகோதரர்களிடம், உறவினர்களிடம் கிடைக்காத ஒரு மன உற்சாகம், மன அமைதி ஒரு ஒரு ப்ளஸர் (இங்கு ப்ளஸர் என்ற வார்த்தையை சரியாக புரிந்துக் கொண்டால் நலம்) எனக்கு இந்த சகோதரன், சகோதரியிடம் இருந்து கிடைக்கும் போது அதை எப்படி வெளிகாட்டாமல் மூடி வைக்க முடியும்? இதற்க்கு கைமாறாக என்னால் என் வாழ்நாளில் எதை கொடுத்து ஈடுகட்ட முடியும் என்று தெரியவில்லை.

     எனக்கு பொதுவாகவே நிறைய கேள்வி கேட்க பிடிக்கும். இதுனாலையே பல பிரச்சனைகளில் மாட்டி தவிப்பேன் நான் வேலை செய்யும் இடத்தில். இது ஒரு பொதுவான பிறச்சனைதான், இன்னும் சொல்லப்போனால் நம் நாடு தழுவிய பிரச்சனையும் கூட. கண்டிப்பா இது உலக பிரச்சனை கிடையாது, அங்கு சக மனிதனை மதிப்பார்கள். ஆனால் நம் நாட்டில் அப்படி இல்லை, மகன் தந்தையை கேள்வி கேட்க முடியாது. அதேபோல் மாணவன் ஆசிரியரை, பொதுமக்கள் அதிகாரிகளை, தொழிலாளி முதலாளிகளை இங்கே இவர்களை எதிர்த்து யாராலும் கேள்வி கேட்க முடியாது. ஏனா நான் பெரியவன் நீ சின்னவன் என்ற பாகுபாடுதான்  காரணம். ஆம் என் அலுவலகத்தில் நான் தவறு செய்யும் போது கண்டிக்கும் என் பாஸ் அவர் ஏதாவது தவறு செய்தால் என்னால் அவரை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது, ஏனா அவர் சுபீரியர் நான் சபார்டினேட். அப்போ சக மனிதனின் பேச்சுக்கு என்னதான் மதிப்பு. என் பேச்சையே மதிக்காத போது என்னால் எப்படி புதுமையான விஷயங்களை கொண்டு வர முடியும். இப்படிதான் ஒருதடவை ஒரு மிஷினில் ஒரு சின்ன பார்ட் முறிந்துவிட்டது. அந்த சின்ன பார்ட் நம் கைவசம் இருக்கவில்லை, அதை பொருத்தினால்தான் மிஷின் இயங்கும். அந்த உடைந்த பார்ட்டை வைத்தே பல கோணங்களில் வரைந்து ஃபாப்ரிகேஷன் செய்ய அனுப்பி வைத்தேன். இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை எனக்கு. ஆனால் என் பாஸ் இதை தான் செய்ததாக சொல்லி மீட்டிங்கில் கூறி இருக்கிறார். இது தெரிந்து நான் அவரிடம் சென்று ‘ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேள்வி கேட்டால் என்னையே சரமாரியாக திட்டி வெளியே போக செய்தார். அவரை என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதுதான் என் அறிவுக்கும், உழைப்புக்கும் கிடைத்த மதிப்பு. எவ்வளவு பைத்தியகாரதனம் பாருங்கள்.

           இதே சின்னவன், பெரியவன் பிரச்சனை நான் இப்போ சமீப காலமாக நான் பழகும் முகநூல் நண்பர்களிடமும் பார்த்து வருகிறேன். ஏதோ ஒரு ஆர்வ மிகுதியில் நானும் ப்ளாகராக ஆகிவிட்டேன். எனக்கு தெரிந்த விஷயங்களை என் ப்ளாகில் எழுதி அதை முகநூலில் பகிர்ந்து சில நண்பர்களிடம் எப்படி இருக்கிறது என் ப்ளாக் என்று கருத்து கேட்பது உண்டு. அதற்க்கு அவர்கள் கொடுக்கும் பின்னூட்டம் இருக்கிறேதே ஆஹா! அதி அற்புதம். ஒரு அடிப்படை அறிவுகூட இல்லாமல் கருத்து சொல்லியிருப்பார்கள். இதை இன்னும் தெளிவாக சொல்ல நான் பார்த்த ஒரு சம்பவத்தை இங்கே பகிர்ந்து பேச விரும்புகிறேன்.

     நான் அலுவலக வேலையாக அடிக்கடி கஸ்டமர் சைட்டுக்கு செல்வேன். அப்படி ஒரு கஸ்டமர் சைட்டில் வேலையை முடித்து வந்தேன், இன்னும் நேரம் இருந்ததால் பக்கத்தில் இருந்த மைதானத்திர்க்கு சென்றேன். அங்கு 8 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கிரிக்கெட் கோச்சிங் நடை பெற்றுக் கொண்டிருந்தது. ஆக்சுவலி இந்த சம்பவத்தை நான் கிரிக்கெட்டை பற்றி ஒரு ப்ளாக் எழுதும்போது சொல்லலாம் என்று இருந்தேன். அதான் இனி எதையும் எழுதுவதாக இல்லையே ஆதலால் அந்த சம்பவத்தை இங்கே சொல்லிக் கொள்கிறேன். அந்த கோச்சிங்கில் சரண் என்ற ஒரு 9-10 வயதுடைய சிறுவனை பார்தேன். நான் இவ்வளவு நாளாக தேடிக் கொண்டிருந்த எனர்ஜி, பவர் இந்த சரண் என்ற சிறுவன்தான். நான் இங்கே மைதானத்தில் நுழைந்தபோது சரண் பேட்டிங் செய்துக் கொண்டிருந்தான். அவன் உயரம் பிச்சில் நட்டு வைத்திருக்கும் ஸ்டம்பின் உயரத்தை விட ஒரு இன்ச் அதிகம் அவ்வளவுதான். அவன் உயரத்திர்க்கு ஏற்றார் போல் ஹெல்மெட், லெக் ப்யாட் அணிந்துக் கொண்டு மிக அற்புதமாக விளையாடிக் கொண்டிருந்தான். பந்தின் மீது அவ்வளவு நுனுக்கமான கவனிப்பு, வேகமான ஓட்டம், ரன்னிங் பிட்வீன் த விகெட்ஸ். அந்த இன்னிங்ஸ் முடிந்தது. சரண் ஒரு 20 ரங்கள் எடுத்திருந்தான், அது அவனளவில் பெரிய விஷயம். அங்கிருந்தவர்களிலே அவன்தான் எல்லாரை விடவும் சிறியவன். அவன் ஆட்டத்தை முடித்துகொண்டு திரும்புகையில் இரண்டு அணியில் இருக்கும் சக வீரர்களும் சரணுக்காக கை தட்டி பாராட்டினார்கள். நான் இந்த செயலை சற்றும் எதிர்பார்க்கவில்லை நான் நம் நாட்டில்தான் இருக்கிறேனா என்ற சந்தேகம் வந்தது. இதில் இன்னும் அதிர்ச்சி என்னவென்றால் இவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் கோச் கூட அதையே செய்துக் கொண்டிருந்தார். இதை பார்த்து என்னை அறியாமலே என் கண்களில் நீர் கசிய ஆரம்பித்தது. நானும் அவர்களுடன் சேர்ந்து சரணை உற்சாக படுத்தினேன். அந்த இன்னிங்ஸில் விளையாடியவர்களை அழைத்து ஒவ்வொருவரின் பர்ஃபாமன்ஸையும் மதிப்பீடு செய்தார் கோச். அவர் மதிப்பீடு செய்த முறை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. முதலில் அவர்களின் நல்ல விளையாட்டு திறனை பாராட்டி, பின்னர் அவர் செய்த தவறுகளை மிகவும் கனிவாக எடுத்து சொன்னார். பாராட்டு என்றால் வெறும் வார்தைகளில் அல்ல கை குலுக்கி, தோழில் தட்டி கொடுத்து, கட்டி அரவனைத்துக் கொள்வது போன்றது. இது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு சிறிய விஷயமாக தெரியலாம். ஆனால், அந்த வீரர்களுக்கு எவ்வளவு உற்சாகத்தை கொடுத்திருக்கும். அந்த பயிற்சியாளர் பார்பதர்க்கு நம் ஸ்டண்ட் மாஸ்டர் பொன்னம்பலம் போல முரட்டுதனமாக இருந்தாலும் அவர் இந்த சிறுவர்களை டீல் செய்த விதம் என்னை அசர வைத்தது.

           அந்த சரண் பையனோட ஆட்டத்தை பார்க்கவே, அடுத்த இன்னிங்ஸையும் பார்க்க ஆரம்பித்தேன். பீல்டிங் செய்யும்போது சரண் பையனோட ஈடுபாட்டோட அளவுக்கு எல்லையே இல்லை. ஆங்கிலத்தில் எந்துஸியஸம் என்று சொல்வார்கள். இந்த அளவுக்கு எந்து எப்படி அவனிடம் வந்தது யோசித்துப் பாருங்கள் எல்லாம் சற்று நேரத்துக்கு முன்னர் கிடைத்த உற்சாகம் தான். அதே எந்துவோடையே பவ்லிங் போட்டான் தொடர்ந்து  அடுத்தடுத்து இரண்டு விகெட்டுகளை வீழ்தினான். எனக்கு அந்நேரத்தில் அவனில் ஒரு சச்சினையும், டோனியையும் பார்த்தேன். நண்பர்களே ‘சரண்என்ற பேரை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், எதிர்காலத்தில் ஒரு அசாதரணமான வீரனாக வருவான். இன்று கிடைத்த உற்சாகம் போல அவனுக்கு தொடர்ந்து கிடைத்தால். ஹாட்ஸ் ஆஃப் சரண். முழூ விளையாட்டையும் பார்த்து விட்டு சரணிடம் என்னை அறிமுக படுத்திக் கொண்டு, என் வாழ்த்துகளையும் தெரிவித்து விட்டுதான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

     நம்மில் எத்தனை பேர் இந்த கோச் போல இருக்கிறோம், இதுதான் நான் சொல்ல வரும் அடிப்படை அறிவு. என் ப்ளாகிர்க்கு பின்னூட்டம் இடுகிறவர்கள் எப்படி தெரியுமா செய்கிறீர்கள். மீண்டும் அந்த சரண் பையனையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம். அந்த கோச் சரணிடம் இப்படி பேசுவதாக வைத்துக்கொள்வோம், ‘ சரண் நீ செகண்ட் ஓவர்ல ஃபோர்த்(4th) பால் ஃபேஸ் பன்னது சரியில்லப் பா அது எப்படி தெரியுமா அடிக்கனும், நேத்து டி.வி ல மேட்ச் பார்த்தியா அதுல சச்சின் ஃபிப்டீ(50) அடுச்ச பிறகு கவர் ட்ரைவ்ல ஒரு ஃபோர் அடிப்பாரு இல்ல அது மாதிரி அடிக்கனும் சரியாஎன்று சொன்னா எவ்வளவு கேவலமாக இருக்குமோ அந்த அளவுக்கு படு கேவலமாக இருக்கு உங்கள் பின்னூட்டங்கள். எப்படி அந்த சின்ன பையனால் சச்சின் அடிக்கும் ஸாட்டுகளை அடிக்க முடியும். அப்போ நீ சின்ன பையனாடா என்று கேட்கலாம். இதை முகநூலிலே ஒருவர் என்னை பார்த்து ‘சின்ன பையனாடா நீ என்று கேட்டார். ஆம் நான் சின்ன பையன் தான் நீங்கள் வெகுவாக கொண்டாடும் எழுத்துலகிற்க்கு நான் சின்ன பையன்தான். மேலே சரண் பையனை எப்படி டீல் செய்தார்களோ அப்படிதான் எழுத்தில் நாங்கள் பெரியவர்கள் என்று சொல்பவர்கள் என்னை டீல் செய்ய வேண்டும். அப்படி செய்ய இங்கு எத்தனை பேர் தயாராக இருக்கிறீர்கள். எல்லாரும் தன்னை பெரிய அப்பாடக்கராக காட்டிக் கொள்வதிலே மும்முறமாக இருக்கிறீர்கள். உங்களுக்கு தெரிந்த அறிவை, திறமையை எத்தனை பேருக்கு கற்றுத் தந்துள்ளீர்கள். நான் எக்காலத்திலும் அப்படி இருக்க மாட்டேன், நான் கற்றது அனைத்தையும் யாருக்கும் எப்போதும் சொல்லி கொடுக்க தயாராக இருப்பேன்.


     இந்த பதிவை படித்து முடித்தவுடன் என்னை எப்படியும் பைத்தியகாரன் என்றுதான் சொல்ல போகிறீர்கள். அதனால் நானே ‘நான் ஒரு பைத்தியகாரன்என்று சொல்லிக்கொண்டேன். ஒரு நண்பர் என்னை பார்த்து கேட்டார் ‘உனக்கு தமிழே ஒழுங்கா வராது நீ எல்லாம் ஏன்டா எழுதறஎன்று. அவர் கேட்ட்து மிகவும் நியாயமான கேள்விதான். ஆதலால் ஒரு முடிவு செய்துவிட்டேன் இனி தமிழை நன்றாக கற்றுக் கொண்டும், தமிழ் சங்க இலக்கியம், நவீன இலக்கியம் இரண்டையும் கரைத்து குடித்துவிட்டுதான் மீண்டும் எழுத வரனும் என்று. ஏனா எல்லாரும் அப்படிதானே செய்றாங்க. ஆனால் நான் திருபவும் எழுத வரும்போது என்னை விமர்சித்தவர்களை மிஞ்சும் அளவுக்கு என் எழுத்து கண்டிப்பாக இருக்கும்.

     இந்த பைத்தியகாரனுக்கும் என் கிறுக்கல்களை சகித்துக் கொண்டு ஆதரவு தந்த நண்பர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள்.

---------------------- ப்ரவீன் -------------------------

1 comment:

  1. anna... really words with a lot of power and fire anna... nan ketadha vida adigama nan edhir parthada vida lot of times multiple ah irukku na...but ungala ivlo feel pana vacha unga fb friend ku dan thanks solanum. coz avar apdi panlana ungaloda indha verithanam kandipa express airukkadhu anna... congratz

    ReplyDelete